வாட்ஸ்ஆப் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் "சாட்லாக்" என்ற புதிய அம்சம் அறிமுகம்!
Published : May 16, 2023 1:13 PM
வாட்ஸ்ஆப் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் "சாட்லாக்" என்ற புதிய அம்சம் அறிமுகம்!
May 16, 2023 1:13 PM
வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லாக் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஷூகர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம், பயனர்களின் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தாலும் லாக் செய்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சாட்டை அவர்களால் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக் செய்யப்பட்ட சாட்டின் மூலமாக பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை செல்போனில் உள்ள கேலரியில் தானாகவே சேமிக்கப்படாது எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வசதி தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் புதிய அப்டேட் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.